தேனினும் இனிய என் தாய்மொழியே கன்னித்தமிழே
தேனினும் இனிய என் தாய்மொழியே கன்னித்தமிழே கட்டிக்கரும்பே என் நாவினில் தினம் வந்து தவழ்வாய் பேச்சினில் இனிமை பொங்க செய்வாய். காலங்கள் ஆயிரம் கடந்து சென்றாலும் என் நினைவினில் நீங்காது நிற்கும் தமிழ்மொழியே உன் சொல் இனிதே அதன் பொருள் இனிதே உன் எளிமை இளமை தாய்மை தூய்மை கண்டு என் உள்ளமெல்லாம் துள்ளிக்குதிக்கின்றதே துள்ளி ஓடும் அந்த புள்ளி மான் போன்றே யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதில்லை என்றான் பாட்டுக்கொரு புலவன் பாரதி தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் பாரதிதாசன் தமிழின் பெருமையை உலகறிய வள்ளுவன் வடித்து வைத்த திருக்குறள் ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி குண்டலகேசி வளையாபதி போன்ற நூல்களெல்லாம் அள்ளி அள்ளி தருகிறது உன் இனிமையை ...
இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கி கொண்டிருக்கிறான் என்று கல்லறையில் எழுதி வைக்கச் சொல்லி மறைந்தார் மேலைநாட்டு அறிஞன் ஜி யு போப். இப்படி மேலை நாடுகளெல்லாம் கொண்டாடி மகிழும் தமிழ் மொழியை தாய்மொழியாக பெற்றது நம் பெரும் பேறு அம்மா என்று அழகு தமிழில் அழைத்துப் பாருங்கள் தாய்மையின் அர்த்தம் புரியும் மாமா மாமி சித்தப்பா பெரியப்பா என்று அழகு தமிழில் உறவுமுறைகளைச் சொல்லிப்பாருங்கள் பாசத்தின் பொருள் புரியும் .
கொஞ்சி பேசிடும் பிஞ்சுக்குழந்தைளின் கொஞ்சும் தமிழை ரசித்து கேளுங்கள் அந் வானம் வசமாகும் போட்டி போட்டு ஆங்கில வழிக்கல்விக்காய் ஏங்கி நிற்போரே என்ன வளம் இல்லை நம் தாய்மொழியில் அள்ள அள்ள குறையாத அமிழ்தினை போல எண்ணி பார்க்க இயலாத கருத்துக்கள் நிரம்பி வழிகிறது நம் தாய்மொழியில் செந்தமிழில் புதுச்சொல்லெடுத்து நான் பா தொடுத்ததால் தேனென்று எண்ணி தேன் குடிக்க வருகின்றது பட்டாம் பூச்சிகள் கூட்டம் பூவென்றெண்ணி மயக்கத்தில் வருகின்றது வண்டுகள் நித்தம்

தமிழ் மொழியே என் தேன் மழையே உன்சாரல் மழையில் நனைந்திட மறந்து பாட்டாளிகள் கூட்டம் நாள் முழுதும் வெயிலினில் உழைத்து களைத்த பணத்தையெல்லாம் ஆங்கில வழிக்கல்விக்காய் கொககொடுக்கின்றதே அது தான் வெட்கம்.
அப்படி ஏன் இந்த ஆங்கில மோகம் அதிலொரு தாகம் மம்மி என்றால் பிணம் என்று அர்த்தம் என்று யாருக்கு தெரியும் மூன்றெழுத்திலே ஒரு கவிதை எழுதச் சொன்னால் நான் உடனே எழுதி விடுவேன் அழகுத்தமிழில் அம்மா என்று நிஜமென்று எண்ணி நாம் தேடும் கல்வி வெறும் வீண் கல்வி கோடிகள் கொட்டி ஆங்கிலக்கல்வி சிலையென்று எண்ணி நம் பிள்ளைகளின் சிந்தனையை பறிக்கும் விளையாட்டுக்கல்வி ஆங்கில மோகம் நமக்கோர் தாகம் தமிழ் அன்னையை வீதியில் தொலைத்து விட்டு தேடித்திரிகிறோம் பிள்ளைகளான நாமும் .குயிலின் குரல் இனிது கார்மேக மழையினிது தமிழின் சொல் இனிது தேடித் தேடி கற்போம் செந்தமிழை ஓடி ஓடி சொல்வோம் அதன் புகழ்தனையே பூவே பூ இதழே கனியே கனிச்சாறே உன் சொல் இனிதே. தாய்ப்பால் என்பதே இயற்கை பிஞ்சு மழலைக்கு தாய்ப்பால் ஊட்டுவது எத்தனை சிறப்போ அதை விட சிறப்பே தாய்மொழியில் கற்பது கவிதைக்கு மொழியாவதும் தமிழே மொழிகளின் தாயானதும் தமிழே தொலைவில் உள்ளவர்களெல்லாம் தமிழ் கற்க அலைந்து திரிகின்றனர் தமிழை தாய்மொழியாக கொண்ட நாமோ தாய் மொழி பாசை மறந்து நிற்கிறோம் அமுத சுரபியை அந்த அலை கடலில் தொலைத்து நிற்கிறோம்
தமிழில் வணக்கம் சொல்லும் போது சில தமிழர்கள் தயங்கி நிற்கிறார்கள் பதிலுக்கு வணக்கம் சொல்ல மறந்து போகிறார்கள் தமிழ் என் உணர்வோடு கலந்திட்ட உயிர்மொழி உயர்ந்தோர் போற்றிடும் உன்னத மொழி சான்றோர் போற்றிடும் செம்மமொழி வாழ்ந்தோர் வாழ்த்திடும் வாய்மொழி. தாய்மொழியில் பேசிட தயங்கி நிற்காதீர்கள் தமிழ் மொழியில் பேசிட மறந்து போகாதீர்கள் தமிழுக்கு இணையான மலர் ஒன்றை நான் தேடிச் சசெல்கின்றேன் வான் இல்லை. உன் அழகுக்கு இணையாக பூ இல்லை. தமிழ் அன்னையே நான் உன் சேயே உன் திருவடி தொழுதால் வாழ்வினிதே
.என் மூச்சுக்காற்றில் நீ நிதமிருக்க உயிர் மூச்சாய் நீ என்னை நிதம் தொடர விண் முட்டி செல்லட்டும் உன் புகழ் இனிதே! தமிழ்மொழி எட்டுத்திக்கிலும் ஓங்கி ஒலிக்கட்டும் தமிழினில் வாழ்த்து கீதங்கள் எங்கும் ஒலிக்கட்டும் பழமொழிகள் ஆயிரம் தமிழ் மொழியின் பெருமை பேசட்டும் தமிழ் மொழியில் இங்கே கல்வி கற்றிட அயல் மொழிகள் வந்து காத்து நிற்கட்டும். தேனும் பாலும் கலந்து சுவைத்திட கிட்டும் தெவிட்டாத இன்பமதை நுகர்ந்து செல்லட்டும். பெண்ணின் பெருமைகள் தமிழ் மண்ணின் பெருமைகள் அறிந்து போகட்டும் கற்பின் மறு உருவாம் கண்ணகி யாரென்று தெரிந்து கொள்ளட்டும் மதுரை எரிந்த கதை அறிந்தே அச்சம் கொள்ளட்டும் ஔவை பாட்டி அன்று அதிமானிடம் அதிசய நெல்லிக்கனி சுவைத்திட்ட ரகசியத்தை தேடி கற்கட்டும் ... சிற்பகலையெல்லாம் தமிழின் இனிமை தனை செதுக்கி வைக்கட்டும் இமய மலை கூட இறங்கி வந்தின்று வாழ்த்து சொல்லட்டும் தமிழே யாவரின் மூச்சாக உயிராக உயர்ந்து வெல்லட்டும். வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ்!
Comments
Post a Comment