Posts

தேனினும் இனிய என் தாய்மொழியே கன்னித்தமிழே

தேனினும் இனிய என் தாய்மொழியே கன்னித்தமிழே கட்டிக்கரும்பே என் நாவினில் தினம் வந்து தவழ்வாய் பேச்சினில் இனிமை பொங்க செய்வாய். காலங்கள் ஆயிரம் கடந்து சென்றாலும் என் நினைவினில் நீங்காது நிற்கும் தமிழ்மொழியே உன் சொல் இனிதே அதன் பொருள் இனிதே உன் எளிமை இளமை தாய்மை தூய்மை கண்டு என் உள்ளமெல்லாம் துள்ளிக்குதிக்கின்றதே துள்ளி ஓடும் அந்த புள்ளி மான் போன்றே யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதில்லை என்றான் பாட்டுக்கொரு புலவன் பாரதி தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் பாரதிதாசன்  தமிழின் பெருமையை உலகறிய வள்ளுவன் வடித்து வைத்த திருக்குறள் ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம்  மணிமேகலை  சீவகசிந்தாமணி குண்டலகேசி வளையாபதி போன்ற நூல்களெல்லாம் அள்ளி அள்ளி  தருகிறது உன் இனிமையை ...   இங்கே ஒரு தமிழ்  மாணவன்  உறங்கி கொண்டிருக்கிறான் என்று கல்லறையில் எழுதி வைக்கச் சொல்லி மறைந்தார் மேலைநாட்டு அறிஞன்  ஜி யு போப். இப்படி  மேலை நாடுகளெல்லாம் கொண்டாடி மகிழும் தமிழ் மொழியை தாய்மொழியாக பெற்றது நம் பெரும் பேறு  அம்மா என்று அழகு...

Best tamil Article For Students

மகனே! ஏன் மறந்தாயோ உன் தாய் மறந்தாயோ உன் உயிர் மறந்தாயோ ... கருவிலே உனை சுமந்திட்ட போது நான் சுமை மறந்தேன் .மண்ணிலே நீயும் பிறந்திட்ட பிறகு கண் தூக்கம் மறந்தேன் . மடியிலே நீயும் தவழ்ந்திட்ட நேரம் நான் உண்ண மறந்தேன். என் கனவை மறந்தேன் தொலைவை மறந்தே உறவை தொலைத்தேன். உனக்காக தானே நான் எல்லாம் மறந்தேன். நீ என்னை ஏன் மறந்தாயோ .. தள்ளாடும் வயதிலே தடுமாறும் உன் தாய் மறந்தாயோ... அல்லாடும் நேரம் சிறு துணையாக வருவாயா?தடுக்கி நான் விழுந்தால் தூக்கி நீ எடுப்பாயா  இல்லை இனி மறந்தே தான் போவாயா.. பகலெல்லாம் காத்திருந்தேன் கண்ணே ஓர் கதை பேச இரவெல்லாம் விழித்திருந்தேன் மகனே உன் முகம் காண எனை மறந்து போனாயோ இல்லை மறைந்து நின்றாயோ நீ கலங்கி தவித்தாயோ. தாரம் கண்டு தயங்கி நின்றாயோ  தாமதமாய் வீடு வந்தாயோ ... தாயிடம் பேசிட நீ  யாரிடம் அனுமதி கேட்கின்றாய் என் உயிரே கலங்காதே  தாயிடம் பேசிட நீ தயங்காதே  தாயின்றி இங்கெவனும் தானாகப் பிறக்கவில்லை. தாரமென கொள்ளவில்லை. எனக்கெனவே நானிருந்த என் மகனை உனக்கெனவே துணையாக நான் தந்து தனியாக நிற்கின்றேன். உயிரென நான் நினைத்திருந்த. என் மகனை பிரிந்...